Daily Archives: July 10, 2014

நற்சிந்தனை! 13 உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் செய்யத் தேவை இல்லை – புனித குர்ஆன்

நற்சிந்தனை!  13

உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் செய்யத் தேவை இல்லை –  புனித குர்ஆன்

இன்று 10.07.2014 மாலை தமிழ் வானொலியில், இஸ்லாமிய நோன்பு திறக்கும் நேர நிகழ்ச்சி ஒன்றில் ஒரு சமயப் பெரியாரால் ஹதீஸ் ஒன்றின் விளக்கம் கொடுக்கப்பட்டது.  

அதில் நாயகத் தோழர் ஒருவர் அழுது கொண்டிருந்ததற்கான காரணம் வினவப்பட்ட போது, அந்த சஹாபா தான் பகலில் மட்டுமே நபிகளார் ஸல் அவர்களுக்குப் பணிவிடை செய்து வருவதாகவும், இரவில் தனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்காதது பற்றி நினைவு இரவு வந்ததனால், உறக்கமற்று இருந்ததாகவும், இரவிலும் நபிகளாருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தைத் தனக்குத் தந்தருள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றார். Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண! அல் குர்ஆன்

 

அல் குர்ஆன் 34:37

உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய பிள்ளைகளோ, உங்களை நம்மளவில் சமீபமாக நெருக்கி வைப்பவர்கள் அல்லர். எனினும், ஈமான்கொண்டு நற்செயல்கள் ஆற்றி வருபவர்களைத் தவிர, அவர்களுக்கு அவர்கள் செய்த செயல்களின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. மேலும். அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் அச்சமற்றவர்களாக இருப்பார்கள்.

 

- நிஹா -

 

Al Quran 34:37

It is not your wealth nor your sons, that will bring you nearer to Us in degree: but only those who believe and work righteousness – these are the ones for whom there is a multiplied Reward for their deeds, while secure they in the dwellings on high! 

 

- niha -

 

இஸ்ரேலுக்கு எதிராக யுத்தப் பிரகடணம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் அரபு நாடுகள் !

இஸ்ரேலுக்கு எதிராக யுத்தப் பிரகடணம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் அரபு நாடுகள் !

 

இதயம் வலிப்பதனால்
இதயமற்றோரின் கொடுமையிலிருந்து
உதயம் கிடைக்க போவதில்லை!

எழுதிக்கொண்டு
பொழுதைப் போக்கிக் கொண்டுள்ளோமென
புழுதியுடன் குருதி ஒட்டியுள்ள
அழுது கொண்டிருக்கும்
அம்முகங்களின் தொடர்கதை
அழுது வடித்துக் கொண்டிருக்கின்றது
நமது ஆற்றாமையைக் கூறி! Continue reading

நற்சிந்தனை! 12

நற்சிந்தனை! 12

நமது செயற்பாடுகள் குர்ஆனிய அடிப்படையில் அமைந்துள்ளனவா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ‌வேளை இது!

முஸ்லிம்கள், குர்ஆன் கூறியுள்ளபடி, முழுமையாக இஸ்லாத்துள் நுழைந்து, வாழ்ந்து வருவார்களேயானால், மிகக் குறுகிய காலத்திலேயே உலக மக்களனைவரும், முஸ்லிம்களைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கி விடுவர். ஆனால், நாம் குர்ஆனிய வாழ்க்கையைத் தவறவிட்டு, மனோ இச்சைகளுக்கு அடிமையாகி, யார் யாரோ கூறுவதைக் கேட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டு வாழ்வது, குர்ஆனிலிருந்து நம்மை தொலைவிற்குக் கொண்டு போய்விட்டது. Continue reading