Daily Archives: July 8, 2014

நற்சிந்தனை ! 11 ஆற்றல்களின் வெளிப்பாடு அமரத்துவத்தைத் தரும்!

நற்சிந்தனை ! 11

 

ஆற்றல்களின் வெளிப்பாடு அமரத்துவத்தைத் தரும்!

நமது ஆற்றல்கள் உலக மாந்தரின் உய்வுக்காக ஏதாவதொரு வகையில் வெளிப்படுத்தப்படுவதே நாம் மனிதனாகப் பிறந்ததன் முக்கியத்துவத்தை நிறைவு செய்வது!

இம்முக்கியத்துவமே, நம்மை மறுமை வாழ்வுக்கும் தயார்படுத்தி விடும்!

இதையே அல்லாஹ். ஈமான் கொண்டு நற்காரியங்கள் செய்வோர் சுவனத்துள் நுழைந்து விடுவர் என்கின்றான். சுவனத்தின் அனைத்து வாசல்களும் திறந்தே இருக்கும். இதனாலேயே இஸ்லாம் சாந்தி மார்க்கமாகின்றது.

சுவனத்துள் நுழைந்து விடுவர் என்பது பல்வேறு உண்மைகளை உள்ளடக்கி உள்ளது. உய்த்துணர்தல் அவசியம்.

 

- நிஹா -

அறிவோம் அறிவை! அறிவால்!

அறிவோம் அறிவை! அறிவால்!

 

” மனித அறிவு வளர்ந்து முதிரும் போது இறை பற்றிய உண்மைகள் வலுப் பெறும், இறை அச்சமும் வெளிப்படும்.

ஆக மனிதர் புனிதர் ஆவார். இதனாலேயே அறியும்படி இறைவன் அறைகூவுகின்றான். அறிவோம் அறிவை, அறிவால்!

 

அறிவால் அறியும் அறிவை அறிந்தவனே எல்லாம் அறிந்தவனாகின்றான்.

- நிஹா

-

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 39:32

ஆகவே, அல்லாஹ்வின் மீதும் பொய்யுரைத்து, இன்னும் உண்மையையும், அது தன்னிடம் வந்த போது பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளருக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?

- நிஹா -

 

Al Quran 39:32

Who, then, said more wrong than one utters a lie concerning Allah and rejects the Truth when it comes to him! Is there not in Hell an abode for the unbelievers?

– niha –