Daily Archives: July 5, 2014

கருஞ்சீரகத்தின் மகிமை!

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

 

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது.
கருஞ்சீரகத்தைக் வினாகிரியில்  (vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

- நிஹா -

தகவல்: இணையம்

Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 7:32

 

‘அல்லாஹ் தனது அடியார்களுக்காக வெளிப்படுத்தி இருக்கும் அலங்காரத்தையும், உணவில் தூய்மையனவற்றையும் தடை செய்தவர் யார்? எனக் கேட்பீராக! அவை இவ்வுலக வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு. மறுமை நாளில் பிரத்தியேகமானதாகும்’ என்று கூறுவீராக! அறியக்கூடிய சமூகத்தினருக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.

- நிஹா -

 

Al Quran 7:32

Say: Who hath forbidden the beautiful (gifts) of Allah, which He hath produced for His servants, and the things, clean and pure, (which He hath provided) for sustenance? Say: They are, in the life of this world, for those who believe, (and) purely for them on the Day of Judgment. Thus do We explain the signs in detail for those who understand.

 

 – niha -

 

 

 

 

 

 

- நிஹா -

நற் சிந்தனை! 9 ஈகையில் நோன்பும் தாயும்!

நற் சிந்தனை!  9

 

ஈகையில் நோன்பும் தாயும்!

 

ஈகையை  உணர்த்திடும் றமழான்!

ஈகையே  பெண்மையின்  இலக்கணம்!!

 

குருதி யால் விளைத்து

குருதியை இழந்து

சுருதியும் சேர்த்து

குருதியை ஊட்டியதால்

 

அருமைத் தாய்

பெருமை பெறுகிறாள்

நோன்பிற்கும் மேலாய்!

 

சுருதி –வேதம்

 

அதனால்தான் அண்ணலார் தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என நவின்றார்களோ!

 

- நிஹா -