Daily Archives: July 1, 2014

ஹைகூ வில் கவிதைகள்!

ஹைகூ வில் கவிதைகள்!

 

பாராத கண்ணைப் போன்றதே,
பகுத்துப் பாரா
பகுத்தறிவும்.

மனிதன் பகுத்தறிவால் மட்டுமே
மற்றைய உயிரினங்களைவிட
மேலானவன்.

பயன்படுத்தப்படாத பகுத்தறிவு
வெளிச்சத்தைக்
காணாத பயிரே!

மனித அறிவு பயன்படுத்தப்பட்டால்
அகிலமனைத்தும்
அவன் காலடியில்.

 

- நிஹா -

வெண்புறா! சமாதானப் புறா!

 

வெண்புறா! சமாதானப் புறா!

 

புவனம் முழுதும் நிறைந்து

கவனம் சிதறாது பறந்து

ஆவணம் கொணர  விரையும்

சமாதானம் கூறும் புறாவே!

புராதனமான  உனது தூதை

சாதனமாக்க மறந்தனரோ!

வேதனை சூழ் வையத்திலே!

 

- நிஹா -

 

 

சிந்திந்துச் செயற்படுவதற்காகச் சில சிறப்பான புனித குர்ஆன் வசனங்கள்

சிந்திந்துச் செயற்படுவதற்காகச் சில சிறப்பான புனித குர்ஆன் வசனங்கள்

6:125 – அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகின்றான். மேலும். எவரை வழி தவறச் சயெ்ய விரும்பகின்றானோ, அவருடைய நெஞ்சத்தை வானத்தில் ஏறுகின்றவனைப் போன்று சிரமத்துடன் கூடிய நெருக்கடியானதாக ஆக்கிவிடுகின்றான். இவ்வாறே ஈமான் கொள்ளதாவர்கள் மீது தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்துகின்றான். Continue reading