Monthly Archives: July 2014

அறிந்திட சில…

அறிந்திட சில…

 

அபத்தைக் காத்து ஆபத்தைப் போக்கு
விபத்தைத் தடுக்க வேகத்தைக் குறை!

சுகத்தையடைய சோகத்தைத் தவிர்
அகத்தைத் திருத்தி இகத்தை வெல்!

பாகமாயச் சமைக்கும் பக்குவமறி
ரோகம் தவிர்க்க போகம் குறை!

ராகம்தானே இசையின் உயிர்
தேகம் இன்றேல் யோகம் ஏது?

தூரம் காண நேரம் அறி
சோரம் போனால் துயரம் வருமே!

பாரமறியப் பலமே தேவை
தாரமிழந்தால் தரமும் குறைவதோ!

ஓரமின்றேல் உருவமும் இல்லை
வீரம் என்பது விவேகம்தானே!

 

- நிஹா -

 

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 42:21

மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதி அளிக்க வில்லையோ, அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா? தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

Continue reading

Quran Kural !

Quran Kural !

குர்ஆன் குறள்

விரும்பிடில் நேர்வழி நடத்திட அல்லாஹ்
விரிப்பனே இஸ்லாத்துக்காய் நெஞ்சை! 6:125

மடமையினால் கொன்றவர் அறிவின்றிப் பாலகரை
அடைந்தனர் நட்டமுடன்வழி கேடும்! 6:140

வழிகெடுத்திட மனிதரை இறைமீது கற்பனை
பழியாளனைவிட அநியாயக்காரன் யார்? 6:144

உறுதியாய் உணவளிக்கின்றோம் கொல்லாதீர குழந்தைகளை
வறுமையெனினும் அன்ஆம் 151

நிலைப்படுத்திடுவீர் நும்முகங்களை தொழுமிட மனைத்திலும்
கலப்பிலாது பிரார்த்திப்பீர் மார்க்கத்தில் 7:29

 

- நிஹா -

Understand the Quranic verses daily in known language and memorize!

 

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 5:111

மேலும், ‘என்னையும், என்னுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ உம்முடைய சீடர்களுக்கு நாம் அறிவித்த பொழுது, ‘நாங்கள ஈமான் கொண்டோம்;, மேலும், நிச்சயமாக நாங்கள் முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாளராக ,ருப்பீராக!’ என்று அவர்கள் கூறினார்கள். (என்பதையும் நினைவு கூருவீராக)

 

 – நிஹா -

Continue reading

வீணன் பேச்சு மலமே நாறும்!

வீணன் பேச்சு மலமே நாறும்!

 

ஞானசார பழங் காணின் சேறு
மானங்கெட்ட கேணையன் கூறு
ஈனர்களுக்காக தன்மானம் சோரும்
வீணன் பேச்சு மலமே நாறும்! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 22:24

இன்னும் பரிசுத்த சொல்லின்பால் அவர்கள் வழி காட்டப் பட்டிருந்தனர். மேலும், புகழுக்குரிய பாதையின்பாலும் வழி நடத்தப்பட்டார்கள்.

- நிஹா -

 

Al Quran 22:24

For they have been guided to the purest of speeches; they have been guided to the path of Him who is Worthy of Praise

- niha -

மனிதப் படைப்பின் மகிமை!

மனிதப் படைப்பின் மகிமை!

 

தன்னைத் தன் ஆற்றலை வெளிப்படுத்துவான் வேண்டிப் படைக்கப்படும் எப்பொருளும் அதன் உயர் மதிப்பைப் பெறவும், அதன் மூலம் படைப்பாளனை வெளிக் கொணரவும் வேண்டுவதால்,அவை சிற்பபான முறையில் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு, வழிகாட்டப்படுகின்றது.

அது போன்றே இறைவனும் மனிதப் படைப்பை தன்னை வெளிப்படுத்தும் சாதனமாக்கியுள்ளான்.

முன்னையதில் படைப்பிற்கு அழிவு மட்டுமே எஞ்சும், பின்னையதில், இவ்வுலகிலும் மறுமையிலும் நன்மைகள் பல விளையும்!

 

- நிஹா -

 

மறை தரும் இறை தத்துவம் பா படிவில் !

மறை தரும் இறை தத்துவம் பா படிவில் !

 

ளாஹிரு ஆனவன் சொல்லால் வல்ல
பாத்தினும் ஆனவன் அல்லாஹ்!
ஆகிலும் அவன்தனைக் காண சாகாமல்
சாகிற வழிதனைக் காணே!

 

- நிஹா -

காற்றில் வந்தது!காதில் விழுந்தது!

காற்றில் வந்தது! காதில் விழுந்தது!

 

ஒரு பாடசாலை அதிபர் தனது பாடசாலையில் கிணறு கட்டுவதற்காக திணைக்களத்திலிருந்து நிதி பெற்றிருக்கின்றார்.

பின்னர் கிணறு கட்டப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது. அதன் பின்னர்தான் தெரிய வந்தது, அவ்வதிபர், கிணற்று நீர் உவப்பாக இருந்ததாகக் கூறி, கிணற்றை மூடுவதற்கான பணத்தையும் ஏற்கனவே பெற்றிருந்தது.

இல்லாத ஒன்று, இருந்து இல்லாமல் போனது. இரட்டிப்புப் பணம் பெற்றது!

கற்பனை அல்ல! காற்றில் வந்தது! கூற்றில் வருகின்றது!

கள்ளனும் காவற்காரனும் எனலாமா!

 

- நிஹா -