Monthly Archives: May 2014

Quran Qural ! குர்ஆன் குறள்!

Quran Qural ! குர்ஆன் குறள்!

மேலும் மார்க்கத்தினை மேன்மையாய் அறிந்துகொள
சாலும் மாயிதா நாலைந்து!

வுளுவின் முறமையினை முழுமையாய்க் கண்டுகொள்
வழுவிலா தயமத் துடன் 5:6 Continue reading

ஹைகூ கவிதைகள்!

ஹைகூ கவிதைகள்!

பாலூட்ட வந்தது
பாலியல் போதையூட்டி
நலிகின்றது.

வளர்ச்சிக்கு வழங்க வேண்டியது,
கவர்ச்சிக்கு காவுபோகிறது.
இகழ்ச்சி எச்சமாகின்றது!

– நிஹா -

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

அல் குர்ஆன் 13:31

நிச்சயமாக, குர்ஆன் அதனைக் கொண்டு மலைகள் நகர்த்தப்பட்டாலும், அல்லது அதனைக் கொண்டு பூமி துண்டு துண்டாக்கப்பட்டாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்களைப் பேச வைக்கப்பட்டாலும், எனினும், அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே, அல்லாஹ் நாடியிருப்பின், மனிதர்கள் அனைவருக்குமே நேர்வழி காட்டியிருப்பான் என்பதை முஸ்லிம்கள் அறிய வில்லையா? நிராகரிப்போர், அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களின் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டே இருக்கும். அல்லது அல்லாஹ்வின் வாக்குறுதி வரும்வரை அவர்களது வீடுகளுக்கு அருகிலேனும் அது இறங்கிவிடும். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்.
Continue reading

ஹைகூ கவிதைகள் !

ஹைகூ கவிதைகள் !

உள்ளமை !

இல்லாமையில் உருவாக்குபவன்
இறைவன் ஒருவனே!
உள்ளமையும் அவனே.

 

நில்லாமை !

நில்லாமை (மாற்றங்கள் )
இயற்கைவிதி.
இறைவன் அருள்.

- நிஹா -

தெரிந்து தெளிந்திட சில….

தெரிந்து தெளிந்திட சில….

 

அடக்கம் ஆல விதை போன்றது
தொடக்கம் முடிவை நோக்கிச் செல்வது
முடக்கம் வரக் கூடாதது
தடக்கம் தெளிவின்மையால் விளைவது
திடுக்கம் பயத்தின் வெளிப்பாடு
நடுக்கம் உடற் சூட்டை வேண்டுவது
படுக்கை சுகத்தை அளிப்பது
உடுக்கை உட‌லைப்பேணுவது
வடுக்கல் வீரத்தை வெளிபபடுத்துவன
இடுக்கண் களையப்பட வேண்டியது
கடுக்கண் காதில் அணிவது
ஒடுக்கம் உயிரை உய்விப்பது

 

- நிஹா -

வாசி புரிதலுக்காக…

வாசி புரிதலுக்காக…

 

தட்டி எழுப்பு தூக்கம் கலைவதற்காக

மற கெட்டதென்பதற்காக

நினை மீட்டிக் கொள்வதற்காக

குறை குறை கூறுவதைத் தவிர்ப்பதற்காக Continue reading

மொழி வளம் பேணுவோம்! Ball Point Pen

மொழி வளம் பேணுவோம்!

 

Ball Point Pen

 

Ball Point Pen என்பதைக் “குமிழ் முனை்ப் பேனா “ என மொழியெர்த்துள்ளனர். குமிழ் உருளும் தன்மை பெறாவிட்டால் எழுத முடியாது. உருளும் பொருள் உருண்டை வடிவாகத்தான் இருக்கும். ஆதலால், Ball என்ற சொல் பந்தை அன்றி உருண்டையைக் குறிப்பதோடு, அதன் உருளும் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது. Continue reading

அறக் கவிதை! ஒழுக்கம் !

அறக் கவிதை!

 

ஒழுக்கம் !

 

ஒழுக்கத்தின் காலடியில்
உலகே பணிந்துவிடும்.
ஒழுக்கத்தைவிடச்
சிறந்த ஆயுதமோ,
அருள் வளமோ கிடையாது!

 

-நிஹா -

ஒழுக்கம் 2 ஐப் பார்க்க

http://factsbehind.net/wp/?p=3268