Daily Archives: March 14, 2014

புதுக் கவிதை !

புதுக் கவிதை !

இலஞ்சம் – சன்மானம்

‘பெயர் மாற்றஞ் செய்யப்பட்ட
கையூட்டெனும் பையூட்டு
சன்மானமாகிய இலஞ்சம்’

அறிவுரை

பஞ்சமில்லாத ஒன்று,
நஞ்சர்  நயவஞ்சகர்
கஞ்சத்தனமில்லாது
மிஞ்சவே தருவது

– நிஹா -

ஆன்மீகத்தினுள் அறிவியல் – ஓர் பார்வை !

ஆன்மீகத்தினுள் அறிவியல் – ஓர் பார்வை !

 

உயிர் என்றால் என்னவென்றே அறியாத நிலையில் உள்ள அறிவியல், உயிருள்ளவை, உயிரற்றவை என எப்படிப் பகுக்கின்றது? அதற்கு ஆதாரம், வெறும் அசைவு என்ற ஒன்றைக் கண்டதனால் எனக் கூறலாம்! உயிரற்றவை என அசைவற்றதற்குக் கொடுத்துள்ள நாமம், எந்த அடிப்படையில் கொடுத்திருந்தாலும், அவைகளிலும் வளர்ச்சி,மாற்றம் ஏற்படுகின்றனவே. கல்லில்கூட உறுதியானவை, அற்றவை, முதிர்ச்சி அடைந்தவை, அற்றவை என அறியப்படுகின்றதே! உலோகங்கள் போன்றவைகூட பௌதிகத் தாக்கங்களை உள்வாங்கி மாற்றங்களை வெளிப்படுத்துகின்றனவே! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 72:14

இன்னும் நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும், இன்னும் நம்மில் அநியாயம் இழைப்போரும் உள்ளனர்.

எனவே, எவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனரோ, அவர்கள் நேர்வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

 

Al Quran 72:14

Amongst us are some that submit their wills, and some that swerve from justice.

Now those who submit their wills – they have sought out of right conduct.

 

- நிஹா -