Daily Archives: March 13, 2014

விலையேற்றின் விளக்குமாறு கேளாரோ!

விலையேற்றின் விளக்குமாறு கேளாரோ!

விலையேற்றம் நாடுகளின் வரலாற்றில்
தடுமாற்றம் மட்டுமல்ல மக்களில்
மனமாற்றம் உருவாக்கி பெருவாகமாகி
நிலைமாற்றத்தையும் ஏற்படுத்தியது! Continue reading

புது மொழிகள்! என்ன பயன்!

என்ன பயன்!

வட்டில் இருந்து என்ன பயன்?
வீட்டில் சோறிட ஆளில்லையெனின்!

கட்டில் இருந்து யாது பயன்?
கட்டிய மனைவி வீட்டிலில்லையெனின்!

தொட்டில் இருந்தென்ன பயன்?
தாலாட்டிட குழந்தைப் பேறில்லாதாயின்!

தோட்டிகள் இருந்தென்ன பயன்?
தொட்டிகள் தெருக்களில் அழுகி நாறுமாயின்!

கோர்ட்டுகள் இருந்தென்ன பயன்?
நீதிக்கேற்றுக்கள் இழுத்து மூடப்படுவதாயின்!

நாட்டில் சட்டங்கள் இருந்தென்ன பயன்?
வீட்டிலும் நிம்மதியாய் வாழ்ந்திட இயலாதெனின்!

போட்டி வியாபாரம் நடந்தென்ன பயன்!
தன்பாட்டிலே விலைகள் வானத்தைத் தட்டுமாயின்!

நோட்டில் சைபர்கள் கூடியென்ன பயன்?
நீட்டியே வாங்கும் திறனை இழக்குமாயின்!

நாட்டில் அபிவிருத்தி நடந்தென்ன பயன்?
நாட்டினர் வாழ்வே கேள்வியாயின்!

பாட்டில் அழகு இருந்தென்ன பயன்?
கேட்டிட பயனில் கருத்துக்கள் உற்றதாயின்!

- நிஹா -

Quran Kural !

குர்ஆன் குறள்!

 

நடத்திடு அல்லாஹ் விடுத்திடா தெமைநீ
நடத்திட்ட வெற்றி வழி!

ஐந்தாறேழு பாத்திஹா கூறுது நேர்வழி
அடைந்திடும் வெற்றி வழி! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 33:67

“எங்களுடைய ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்களில் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். எனவே, அவர்கள் எங்களை வழி தவறச்செய்து விட்டனர்” என்று கூறுவார்கள்!

 

Al Quran 33:67

And they would say: “Our Lord!  we obeyed our chiefs and great ones, and they misled us to the path”

 

- நிஹா -