Daily Archives: March 2, 2014

பிரிவினைவாதிகளின் பார்வைக்கு!

பிரிவினைவாதிகளின் பார்வைக்கு!

இவை தராசு. புர்கான் உரைகல்!

நிறுத்து, உரசிப்  பாருங்கள் உங்கள் எடையை!

 

6:159 –  நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்துப் பல பிரிவினர்களாகிவிட்டனரோ, அவர்களுடன் நீர் எவ்விஷயத்திலும் சேர்ந்தவரல்லர்.  அவர்களது காரியமெல்லாம் அல்லாஹ்வின்பால் உள்ளன. பின்னர் அவர்கள் செய்துகொண்டிருந்தவை குறித்து அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

 

30:32 –  தங்களுடைய மார்க்கத்தைப் பிரித்து பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருந்துள்ளவற்றைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.

 

23:53 – பிறகு அவர்கள் தம் காரியத்தைத் தங்களுக்கிடையே பல பிரிவுகளாகத் துண்டாக்கி விட்டனர். ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடமிருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

 

21:93 – தங்களது காரியத்தில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் பிளவுபட்டுவிட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்.

 

3:105 –  இன்னும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னர், கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விட்டார்களே, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். அத்தகையோருக்கு மகத்தான வேதனையுண்டு.

 

15:90 – பலவாறாகப் பிரித்தோர் மீது, நாம் இறக்கியவாறே.

 

15:91 – இந்தக் குர்ஆனைப் பல பிரிவுகளாக ஆக்கிக்கொண்டவர்கள் மீதும்.

 

15:92 – உமது ரப்பின் மீது சத்தியமாக, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் விசாரிப்போம்

 

இஸ்லாம் என்ற கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள் என்ற இறைகருத்தை ஏற்று ஒற்றுமையைக் கடைப் பிடிக்காதவரை இவ்வாறான கேவலங்களை இம்மையிலும், மறுமையில் தண்டனையையும் பெறவே வேண்டி வரும். 

 

பிரிவினையாளர்களுடன் நபிகள் கோமான் ஸல் அவர்களுக்கே எவ்வித சம்பந்தமும் இல்லையென்பதை அறிந்தால் பிரிவினையாளர்களின் இஸ்லாமிய நிலை என்னவென்பது விளங்கும்.

 

- நிஹா -

சிந்தனைச் சிதறல்கள்! …

சிந்தனைச் சிதறல்கள் …

 

 

அறிதல் பற்றிய புரிதல்கள்!

1. நம்பிக்கையின்மையும், பொறுமையின்மையும் அறியாமையின் இரு அவதாரங்கள்.

2. அறிதலின் அடைவு அறிந்ததைப் புரிந்து நடத்தலிலே. Continue reading

தினம் ஒரு மறை வசனம் மனனம் பண்ண!

தினம் ஒரு மறை வசனம் மனனம் பண்ண!

 

  அல் குர்ஆன் 34:49 :

” நீர் கூறுவீராக! உண்மை வந்து விட்டது. பொய் புதிதாக ஒன்றையும் செய்திடவில்லை. இனி செய்யப் போவதும் இல்லை.“

 

 தொடர்பான வசனம்: 17:81, 21:18, 42:24