Daily Archives: February 28, 2014

சிந்தனைச் சிதறல்கள்! முயற்சி!

முயற்சி!

1. முயன்றதன் முடிபு இயன்றதன் அளவு.
2. முயற்சி இறைவனை நம்பால் ஈர்க்கும்.
3. முயற்சி அறிவுக்கும் அனுபவத்துக்கும் நெருக்கமானது.
4. முயற்சி வெற்றியின் அடிப்படை.
5. முயற்சியின் முழு வடிவம் வெற்றி.
6. தோல்வியும் முயற்சியின் ஒரு பாதையே.
7. முயற்சியற்றவை உயிரற்றவைகளே.
8. முயற்சிக்கு முன்னால் முடியாது என்பது தலை குனிந்துவிடும்.
9. முயற்சியின் எல்லை முழுமையில் முடியும்.
10. பசி இருக்கும்வரை முயற்சியும் இருக்கும்.
11. முயற்சி இயற்கையின் உந்தல்.
12. தேவையால் முயற்சி கருவுறுகிறது. நன்முயற்சி வெற்றியைப் பிரசவிக்கிறது.
13. அனைத்து அடைவுகளுக்கும் ஓர்வழிப் பாதை முயற்சியே.
14. முயற்சியற்றவன் முழு ஜடமே.
15. முயற்சியின் அளவே அடைவும், பலனும்!

 

- நிஹா -

Quranic Way… மனிதர் ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது குர்ஆன்

குர்ஆன் வழியில்…

மனிதர் ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது குர்ஆன்!

நாம் பிறந்த இந்தப் பூவுலகிலும், நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்ணகத்திலும் கோடானுகோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமிகள், பிரபஞ்சங்கள் என எவையெவை யெல்லாமோ விரவிக் கிடக்கின்றன. Continue reading