Daily Archives: February 17, 2014

Quran Kural !

குர்ஆன் குறள்!

செய்திடுகலந் தாலோசனை காரியங்க ளனைத்தையும்
செய்யுமுன் 3:159 காண்!

குன்றிடாதீர் பலம் கொண்டிடாதீர் கவலை
குன்றாவிசுவாசி 3:139 பார்! Continue reading

Siddha Medical Tips! சித்த மருத்துவக் குறிப்புகள்!

கைமருந்து

 

சீதபேதியகல மலைவாழைப் பழத்தை யுண்டிடுக
பேதமில் நல்லெண்ணெய் சேர்த்து!

உண்டுவர இருவேளை செவ்வரத்தை யிலைத்தூள்
நின்றிடுமே மலச்சிக்கல் நம்பே!

சுட்டெடுத்த மஞ்சள்சாம்பலை தேனுடன் அருந்திவர
கட்டாயம் குடற்புண் சுகம்!

நெல்லிச் சாறைத் தேன்கலந்து அருந்த
பொல்லாத தொடர்விக்கல் தீரும்!

பவுத்திரமாக டம்ளர்நீரில் கறிவேப்பிலை இஞ்சிசீரகம்
அவித்தருந்த அஜீரணம் சுகம்!

 

- நிஹா -

புதுக் கவிதை! புத்தகங்கள் இன்று!

புதுக் கவிதை!

 
புத்தகங்கள் இன்று!

புத்தகங்கள் இன்று மைநிறைந்த
பக்கங்களின் தொகுப்பு
சத்தில்லா அரசியல் யாப்பு
வித்தில்லா மரங்களின் தோப்பு

 
- நிஹா -