Daily Archives: December 12, 2013

வட்டி றிபா பற்றி குர்ஆன் கூறுவதென்ன?

வட்டி றிபா பற்றி குர்ஆன் கூறுவதென்ன?

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் சுபுஹானஹுவதாலா தனது திருத்தூதரும், இறுதித் தூதருமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை மனிதவர்க்கத்திற்கு மாபெரும் அருட்கொடையாக கொடுத்தருளினான். இவ்வருட் கொடையான திருக்குர்ஆன், ஊழிவரை செல்லுபடியாகக் கூடிய முறையில், அழகான இலகு நடையில், தெளிவாக, பாமரர் முதல் பண்டிதர் வரை புரிந்து கொள்ளக் கூடிய தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவாறு இறக்கப்பட்டுள்ளது. இது கருத்தாழமிக்கது. ஞானம் நிறைந்தது என அல்லாஹ்வே சிலாகித்துக் கூறுகின்றான். இது முழுக்க முழுக்க சீரான, செழிப்பான, முறையான, நேரான வாழ்க்கையை மானுட வர்க்கம் மேற்கொள்வதற்கான சட்ட திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் முன்னை நாட்களில் இறைநெறியை ஏற்று வாழ்ந்து வெற்றி பெற்றோரினதும், ஏற்காது முரண்டுபிடித்ததனால் அழித்தொழிக்கப்பட்டவர்களினதும் வரலாறுகளையும் கூறி அறிவுறுத்துகின்றது. Continue reading

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்!

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது. Continue reading

பலதும் பத்து !

பலதும் பத்து !

காட்டில் மழை பெய்யலாம்,
நாட்டில் வெள்ளம் போடலாமா?

றோட்டு மேல் றோட்டுப் போட்டால்
வீட்டுக்குள்ளே வெள்ளம் வராதா!

கூட்டில் பறவை வளர்ப்பது சரியெனின்,
கூட்டில் மனிதன் இருப்பது பிழையா? Continue reading