Category Archives: General

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் – 4:112

எவரேனும், தவறையோ, பாவத்தையோ சம்பாதித்து, பின்னர் அதைக் குற்றமற்றவர் மீது வீசியால், அப்பொழுது அவதூறையும், வெளிப்படையான பாவத்தையும் அவர் நிச்சயமாகச் சுமந்து கொள்கின்றார்.

 

- நிஹா -

 

Al Quran – 4:112

But if anyone earns, a fault or a sin and throws it on to one  that is innocent, he carries a false charge and a flagrant sin.  

 

- niha -

 

வாழ் குறள்!

வாழ் குறள்!

 

1. கூடல் இன்பம் நீடித்து நிலைப்பது
கேடிலாக் கூடலிற் காண்!

2. கூடலின் இன்பம் குறைவிலா துயரும்
ஊடிப்பின் கூடும் போது!

3. ஊடலும் கூடலும் உவகையே தரும்
கேடிலா உறவே யானால்! Continue reading

ஹை கூ வில் – பேனா பேசினால்….

ஹை கூ வில்

பேனா பேசினால்….

 

பேனா
பேசினால்
எழுத்தாம்!

பேனா
விசித்திரமாக
சித்திரமாகும்!

எழுத்துக்கள்
பேசினால்
எல்லாம் விளங்க வரும்! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 98:5

மேலும் அல்லாஹ்வை, அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக, நேர்வழியின்பால் சாய்ந்தவர்களாக, அவர்கள் வணங்கிட வேண்டியும், அவர்கள் தொழுகையை நிலைநிறுத்திடவும், ஜக்காத்தைக் கொடுத்திடவுமேயன்றி, அவர்கள் கட்டளையிடப்படவில்லை. இன்னும் அதுதான் உறுதிமிக்க மார்க்கமாகும்.

 

- நிஹா -

Continue reading

கம்மளையிலிட்டுக் கருவறுப்பான்!

கம்மளையிலிட்டுக் கருவறுப்பான்!

 

ஆண்டவனை மறந்து கோரத்
தாண்டவமாடிய கோட்டாவே
ஆண்டவர் பலர் உலகில்
மாண்டொழிந்ததை மறந்தாயோ!

கெட்டபய கோட்டபயவின்
கொட்டமழித்திட இறைவன்
திட்டமிட்டான் அதுவே அவனழிவாம்
பட்டத்து மஹாராஜா தேர்தல்!

குறிக்கப்பட்ட நாள் இறையால்
மறுக்கப்பட முடியாதென்பதைனை
மறக்கப்பட முடியா முடிவாய்
இறக்கி வைத்தான் மண்ணில்!

பட்டழிந்த மக்களின் கண்ணீர்
தட்டழிய வைத்துள்ளது அவர்தமை
விட்டொழியாது விரட்டும்
நட்டமே விளையும் நாசமே எஞ்சும்!

நிம்மதியைக் குலைத்தீ்ர்கள்
நேர்மையை விலை பேசினீர்கள்
நன்மை பெறும் வழிகளை அடைத்து
நம்மை அச்சத்தால் நலியவிட்டீர்!

உம்மை இறைவன் ஒருபோதும்
எம்மை அழிக்க நினைத்ததனால்
சும்மாவிட்டுவிட மாட்டான்
கம்மளையிலிட்டு கருவறுப்பான்!

 

- நிஹா -

அல்லாஹ் செய்வதை மனிதன் செய்யலாமா! அல்லாஹ் செய்வது போன்று மனிதனால் செய்ய முடியுமா!

அல்லாஹ் செய்வதை மனிதன் செய்யலாமா! அல்லாஹ் செய்வது போன்று மனிதனால் செய்ய முடியுமா!

 

மேற்கண்ட இரு வினாக்களும் நமது செயற்பாடுகளைத் தீர்மானிப்பதில் மிகவும் வேண்டற் பாலனவாகவே நான் கருதுகின்றேன். வேண்டற்பாலன என்ற சொல்லோடு அவ்வசனங்களின் கருத்தை மட்டுப்படுத்திவிடவும் என்னால் முடியாது. காரணம், அவை அல்லாஹ்வால் நமது கடமையாகக் கூறப்பட்டும் உள்ளன என்பதுதான்.

இவற்றை அறியும் முன்னர் பின்வருவனற்றை அறிவது, இவ்வேலைகளை மனிதர் செய்வது, இறைவனைப் போன்று நாமும் செய்வது என்ற நிலையை வருவிக்கும் என்ற கருத்தாக கற்பனை செய்யப்பட்டு, அதனைச் சிலர் மக்கள் மத்தியில் பரப்பி, அவை ஷிர்க் என்ற இணைவைத்தல் என்பதையும் கூறி வருவதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் இருந்து விடுபடவும் உதவும்.

Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 40 : 11

 

அதற்கவர்கள், “எங்கள் ரப்பே! இருமுறை எங்களை நீ மரிக்கச் செய்தாய். இருமுறை எங்களை நீ உயிப்பித்தாய். எங்களது பாவங்களை நாங்கள் ஒப்புக் கொண்டோம். எனவே, வெளியேறுவதற்கு வழியேதும் உண்டா?“ என்று அவர்கள் கேட்பார்கள்.

- நிஹா -

Al Quran 40 : 11

They will say, ‘ Our Lord ! Twice hast thou made us to die, and twice hast thou given us Life! Now have we recognized our sins: is there any way out.

- niha -

மருத்துவம் – படித்ததில் இருந்து…

மருத்துவம் – படித்ததில் இருந்து…

 

கொலஸ்ட்ரோல் அடைப்பு, நரம்பு வியாதிகள் நீங்க….

வல்லாரைக் கற்கம்

 

பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, வல்லாரை, உருண்டைப் பிரண்டை வகைக்கு ஐந்து கிராம் அரைத்துக் குளிகை போல் செய்து, காய வைத்துக் காலை, மாலை பாவித்துவர நரம்பு சம்பந்தமான சகல வியாதிகளும் நீங்கும், அத்தோடு கொலஸ்ட்ரோல் ஆல் ஏற்படும் அடைப்பு சுகமாகும்.

 

- நிஹா -

Quran Kural!

குர்ஆன் குறள்!

 

அறிவதற்காய் வந்தமகன் அறிந்திடனும் நல்லவற்றை
தெரிந்து தெளிந்து காலமெலாம்!

 

அக்கணமே முடிந்துவிடும் மூச்சிழந்தால் வாழ்வு
சிக்கனமாய் செலவு செய்!

 

சிறப்பான வாழ்விற்கு உரித்தான ஆயத்தம்
பிறப்புமுதல் செய்து வரனும்!

 

மிச்சமுள்ள வாழ்வுதனை கச்சிதமாயக் கடந்துசெல
இச்சைதனை ஒழித்து விடு!

 

ஈமானின் முதல்படிவம் தொழிலே‌யாமது சீரானால்
ஈசனிடை விலகும் திரை !

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 2:177

கிழக்கிலோ, மேற்கிலோ உங்கள் முகங்களைத் திருப்புவது நன்மை ஆகிவிடாது. எனினும், நன்மையை அடைபவர், எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தைத் தம் விருப்பத்துடன் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசகம் கேட்போர் முதலியோருக்கும், விடுபடுவதற்கும் கொடுத்து உதவுபவரும், மேலும், தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தை வழங்கி வருபவரும், மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவரும, கடும் வறுமையிலும் பிணியிலும், போர்க் காலத்திலும் பொறுமையை மேற்கொள்பவரும்தான். இத்தகையோரே உண்மையாளர். இன்னும் அவர்கள்தான் இறை அச்சம் கொண்டோர்.

- நிஹா -

 

Al Quran 2:177

 

It is not righteousness that ye turn your faces towards East or West; but it is righteousness to believe in Allah and the Last Day and the Angels and the Book and the Messengers;  to spend of your substance, out of love for Him. for your kin, for Orphans, for the Needy, for the Wayfarer, for those who ask, and for the ransom of slaves, to be steadfast in prayer and give Zakat, to fulfil the contracts which you have made; and to be firm and patient in pain and adversity and throughout all periods of panic.  Such are the people of truth, the God-fearing.   

- niha -