Category Archives: Politics

‘கோ’னுயர்ந்தால் வீணழிவே!

‘கோ’னுயர்ந்தால் வீணழிவே!

ஞானசாரா ஞானம்சாரா கோணற் குணத்தாய்
மானமற்று கேணைத்தனமாய் மனிதாபிமாமும் இன்றி
ஊனமனத்தால் காணாததைக் கண்டதாக குர்ஆனில்
வீணாய்ப் பழிசுமத்தி மக்களை வழிகெடுத்தாய்!

அதனால் மானாய் மருண்டனர் மக்கள்
வீணாய் அளுத்தகம அழித்தது கண்டு
போநாய் எனக்கூற ஒரோநாயும் இல்லாது
தானாய் நடத்தினர் ‘பொ’னாக்கள் பார்த்திருக்க!

பானமருந்தி நாணமின்றி சோனகர் சொத்தை
காணச்சகியாது ஈனத்தனமாய் எரித்தே தள்ளினர்
‘ஜ’னாவும் ‘கோ’னாவும் கூசாமற்சுமத்தினர் குற்றம்
‘ம’னாவின் மானங்காக்க ஐநா சென்றதை மறந்து!

பேனாக்காரர் சேனா(ய்)க் கூட்டத்தைக் கண்டனரில்லை
கண்டிக்க வுமில்லை தண்டிக்க வேண்டியோர்
மண்டியிட்டனர் தண்டல்கார தலைவனின் கூற்றால்
குண்டர்படையினர் கொளுத்தி கொள்ளையு மடித்தனர்!

காவிகள் கவிகளாய் காடைத் தனத்தால்
காவு கொண்டனர் தாவிச் சென்றே
மூதேவிகள் செயலால் சீதேவிகள் அழிந்தனர்
கோதாவில் நின்றோர் பேதமை காட்டினர்!

சாதுக்கள் பெயரில் சண்டாளர் கூட்டம்
வாதுகள் செய்து வம்பை வளர்ப்பதா
மோதுதல் விரும்பா மூமின்களை அழிக்க
சூதுகள் செய்து தீதுகள் செய்யாதீர்!

போதும் உங்கள் புன்மனச் செய்கை
மீத முள்ளதைக் பாதுகாத்திட நாமும்
மோதும் நிலையை உருவாக்கியே எம்மை
ஏதும் செய்திட ஏவுறீர் தூண்டி!

 

- நிஹா -

 

 

இறை சாபம் பெற்ற யூதர்!

இறை சாபம் பெற்ற யூதர்!

 

கொடுங்கோலன் பாரோ மன்னன்
கொன்று குவித்தான் இஸ்ரேலரின் ஆண் குழந்தைகளை
கோமான் மூஸா காப்பாற்றினார் நாயனுதவியால் Continue reading

வீணன் பேச்சு மலமே நாறும்!

வீணன் பேச்சு மலமே நாறும்!

 

ஞானசார பழங் காணின் சேறு
மானங்கெட்ட கேணையன் கூறு
ஈனர்களுக்காக தன்மானம் சோரும்
வீணன் பேச்சு மலமே நாறும்! Continue reading

விலையேற்றின் விளக்குமாறு கேளாரோ!

விலையேற்றின் விளக்குமாறு கேளாரோ!

விலையேற்றம் நாடுகளின் வரலாற்றில்
தடுமாற்றம் மட்டுமல்ல மக்களில்
மனமாற்றம் உருவாக்கி பெருவாகமாகி
நிலைமாற்றத்தையும் ஏற்படுத்தியது! Continue reading

ஹைகூ கவிதைகள் ! வாக்கு!

ஹைகூ கவிதைகள் !

வாக்கு!

 

வாக்குகள் தேக்கமடைந்து விடுமாயின்

அது அநியாயத்திற்கு, அநீதிக்கு

அனுமதிப்பத்திரம் வழங்கிவிடுகிறது.

 

வாக்காளருக்குக் கொடுக்கப்பட்ட

வாக்குகள் மீறப்படாதிருந்தாலே

அது ஆச்சரியம். Continue reading

படிப்படியாக பொடியாகிறதா மனித உரிமை!

படிப்படியாக பொடியாகிறதா மனித உரிமை!

 

அடிப்படை மனித உரிமை மீறல்
படிப்படியாக சுக்கான் அற்ற படகாய்
கடிமனங் கொண்டோர் கைகளில் சிக்கி
பொடிப் பொடியாக போகின்ற தய்யோ!

காவி யுடையில் மதத்தின் பெயரால்
கட்டாக்காலிகள் சிலது யாப்பினை மிதித்து
அடுத்தவர் உரிமையை மடுத்திட விழைந்து
கொடுத்திடா சுதந்திரம் பறிப்பது காண்பீர்!

சிறுபான்மை என்பது சிதைத்திட வல்ல
பெறுமதி யற்ற தறுதலைகளு மல்லர்
உறுதுணை யாப்பால் உரிமையும் உள்ளோர்
மறுத்திடும் உரிமை யாருக்கு உண்டோ!

யாப்பால் யாம் பெற்ற மதசுதந்திரம்
கோப்பில் கிடந்து இறப்பதற் கல்ல!
யாப்பது யாப்பை பழம் பேப்பருக்காயல்ல!
காப்பது அரசது கட்டாய கடமை!

சுதந்திரம் என்பது மற்றவர் ஒருவர்
தந்திரம் செய்து பறிப்பதும் அல்ல
சுதந்திரம் என்பது இடையீ டின்றி
சுதந்திரமாக சமத்துவம் பேணல் தானே!

மதங்கள் என்பது பின்பற்று தற்கே
மதங்கள் பின்பற்றல் என்பது அடுத்தவர்
மதத்தைப் பின்பற்றவிடாது தடுப்பதற் கல்ல
சமத்துவம் பேணி பின்பற்றுதல் தானே!

பேணப்படுவதே மதத்தில் பெறு பயன்
பேணர்கள் சுமந்து பழித்திட வல்ல!
ஊணப் படுத்தல் மனஊனம் அடைந்த
ஈனர்கள் செய்யும் இழி செயல் அன்றோ

யாரும் காப்பதற்கல்ல மதங்கள் பெற்றது
பாரில் பண்புடன் வாழ்ந்து பின்பும்
சீர்பெற்று நலம்பல புரிந்து நன்மைபெற்று
நரகினில் உழலாது காப்பதற் கல்லோ!

விடுத்திட ஆளின்றி தடுத்திடும் உளமுமின்றி
தடியர்கள் கையில் பொடிபோல் சிக்கி
விடிவில்லா கருமை படருது தடுத்திட
கடிமனம் தளர்வது குடிகளைக் காக்கும்!

 

-   தேசபக்தன்  –